2026.03.23

பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கூட்டம் 2026

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுக்கான கூட்டமானது உதவி பிரதேச செயலாளர் தலமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் சிறுவர்களின் கல்வி மேம்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கு, போக்குவரத்து, நல்வாழ்வு மற்றும் அறநெறி தொடர்பாக இருக்கக் கூடிய சவால்கள் மற்றும் இடைவெளிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தன.
தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு, அபிவிருத்தி, பிரச்சினைகள் மற்றும் சட்ட ரீதியற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன.
இக் கூட்டத்தில், ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறை அதிகாரி, வலயக்கல்வி உத்தியோகத்தர், பிரதேச சபை அதிகாரி. பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் கிளையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of one or more people and people studying
May be an image of one or more people, speaker and dais
 

2026.03.17

தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்" சமூக உற்பத்திதிறன் மாதிரி கிராம திட்டம்

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வித்தியாபுர கிராம அலுவலர் பிரிவில் 1/2 ஏக்கர் வித்தியாபுரம் கிராமத்தினை சமூக உற்பத்திதிறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வானது இன்றையதினம் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ப.கனிஸ்ரன் ஓருங்கிணைப்பில் வித்தியாபுர கிராம மக்கள் மற்றும் கிராமமட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு இ.நிஷாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் கரிதாஸ் நிறுவன இயக்குனரும் கலந்து கொண்டதோடு வித்தியாபுர கிராமத்தினுடைய சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு இத்திட்டம் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இறுதியாக உற்பத்தி திறன் மாதிரி கிராமத்தினுடைய பெயர்ப் பலகையினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர்.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராம மக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டுக்களும் விழாவினை மேலும் சிறப்பிதத்தோடு கிராம மக்கள் ஒன்றிணைந்து பொது முன்னுதாரண வேலைத்திட்டமாக சிரமதானத்தினையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து வேலைகளிலும் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வித்தியாபுரம் கிராமத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் ,எமது கிராமத்தின் இந்த புதிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.
May be an image of ‎flute, hookah and ‎text that says "‎CLE'N SP SPLANKR Clean CleanSriLankaGut Sri Lanka தேசர்- சழுக் سا துசததைக் ததச சத்தைக் NPS இணையாக செயல்படு 20252027 tawrG.aoGkdyasa.I .)‎"‎‎
May be an image of one or more people
May be an image of one or more people and text that says "NPSSRILMA SRI LAMHA NPS திட்டத்திற்கு இணையாக செயல்படுத்தப்படும் விறன் மாதிரி கிராம திட்டம் 20252027 மெமுப்பகின்ற GULTLDI டகின்ற வளமான கிராமம் 브원인는 里 ညထေည်ကြေညွ bl အည်ဲ தபண் นทอ た日 தழில் பரசி Chmb நொழிஸ் அழைச்சு சட்வரு நந்தி மாவட் ரெயலகம் மல் முல்லைத்திவு பரதே செபலகம் டடடுகட்டான் ரன்"May be an image of one or more people and text
May be an image of one or more people, people smiling and text
May be an image of one or more people
 

2026.02.04

78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியிருந்தன. தொடர்ந்து இந் நன்நாளை நினைவுகூரும் வகையில், அலுவலக வளாகத்திலே மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அதனைத் தொடர்ந்து, டித்வா புயல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவு, உடுபுடவை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No photo description available.
No photo description available.
No photo description available.
 

2026.02.16

சனாதிபதி நிதியத்தினூடாக மருத்துவ உதவி வழங்கி வைப்பு

சனாதிபதி நிதியத்தின் ஊடாக பிரதேச செயலகம் வரை பன்முகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் முதலாவது கொடுப்பனவாக இருதய சத்திர சிகிச்சைக்காக ரூபா 250,000/- பெறுமதியான காசோலையானது பெரிய இத்திமடு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த திருமதி அழகுராணி தெய்வேந்திரம் அவர்களுக்கு பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

No photo description available.

 

2026.01.19

சூரிய பகவானுக்கு நன்றி கூறி புதிய அறுவடையைக் கொண்டாடும் தமிழர்களின் முக்கியமான அறுவடைத் திருநாளாகிய தைப்பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டிருந்தன. அத்துடன் பொதுமக்களும் குறித்த பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு பொங்கல் உண்டு மகிழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

 

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top