2025.06.23
 
பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்
 
 
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான குறித்த கலந்துரையாடலானது  (2025.06.23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதிப்பார்ந்த உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றிருந்தது. 
 
முதலாவது காலாண்டின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கிராம மட்டங்களில் தீர்வு காணப்பட முடியாத சிறுவர்களது கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பு, போசாக்கு, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளும் பெண்கள் தொடர்பாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படிருந்தன. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக எந்ததவிதமான தீர்வுகளும் பிரதேச மட்டத்தில் காணமுடியாத பிரச்சினைகள் மாவட்ட மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கலந்துலையாடலில் ஆராயப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தன. 
 
இக் கலந்துரையாடலில், பாடசாலை அதிபர்கள், ஒட்டுசுட்டான், மாங்குளம் பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர், சுகாதார மருத்துவ மாது, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
466add0d 239e 4eb8 8116 6e2217bd2c1a
5e169140 7c23 4790 a907 a27044e42cb9
2a7dd564 82a2 4ea8 93dd 42839e80f103
 

2025.05.31

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்
 
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைக்களினால்  வருடாந்தம் முன்னெடுக்கப்படும் உண்டியல் சேமிப்பு வேலைத்திட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
WhatsApp Image 2025 06 02 at 09.20.38 ff22e8ca
WhatsApp Image 2025 05 31 at 11.04.01 a05728b2
விழிப்புணர்வுக்கருத்தரங்கு
(மு/முத்துஐயன்கட்டு இடதுகரை மகா வித்யாலயம்)
 
குழந்தைகள் பாதுகாப்பு – சிறார்களின் உடல் மற்றும் உள நலன், பாதுகாப்பு, மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு.
 
நல்வழிப்படுத்தும் பெற்றோர்கள் – பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் முறைகள், புரிதல் மற்றும் நேர்மையான வளர்ப்பு நடைமுறைகள்.
 
தொழில்திறன் வழிகாட்டல் – மாணவர்களுக்கு எதிர்கால கல்வி, தொழில்துறை தேர்வுகள் மற்றும் வாழ்க்கைத் திட்டமிடல் தொடர்பான வழிகாட்டல்.

IMG 20250526 WA0001IMG 20250523 WA0007IMG 20250523 WA0008IMG 20250523 WA0009IMG 20250526 WA0000IMG 20250523 WA0010

2025.05.28

அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல்
 
பிரதேச செயலாளர் தலைமையில் ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் பணிபுரிகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடனான முன்னேற்றமீளாய்வு, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
 
20250528 101322
20250528 101405

2025.05.22

மத்தியஸ்தம் தொடர்பான அறிமுகக் கலந்துரையாடல்

குறித்த அறிமுக நிகழ்வானது 2025.05.22 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. மதிப்பார்ந்த உதவி பிரதேச செயலாளர் அவர்கள் குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், பிரதேச செயலக சமுதாய மத்தியஸ்த உத்தியோகத்தர் மற்றும் மாவட்டச் செயலக காணி மத்தியஸ்த உத்தியோகத்தர் ஆகியோர் குறித்த நிகழ்வினை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

FB IMG 1748234397347

FB IMG 1748234400063

FB IMG 1748234402271

 

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top