2025.11.20
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பொருளாதார ரீதியான இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற ஒரு தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் அவர்கள் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியிருந்தனர்
2025.11.13
இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் அவர்களுடன் இணைந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களினையும் வழங்கிக் கௌரவித்திருந்தனர்.



2025.10.15
சிறுவர் பிரச்சினைகளுககு தீர்வினை வழங்கும் வேலைத்திட்டம்
பாடசாலை வரவு ஒழுங்கீனம், பாடசாலை இடை விலகல் மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாமை ஆகிய சிறுவர் பிரச்சினைகளுககு தீர்வினை வழங்கும் வகையிலான மூன்றாம் கட்ட வேலைத்திட்டமானது மதிப்பார்ந்த உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றிருந்தது. குறித்த சிறப்பு வேலைத்திட்டத்தில், வெளிக்கள கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தவகையில், முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 40 பிள்ளைகள் குறித்த விசேட வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


2025.10.16
சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் முத்தையன்கட்டு இடதுகரை அ.த.க.பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தன.
பாடசாலையின் முதல்வர் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
குறித்த சிறுவர் தின நிகழ்விற்கான அனைத்துவிதமான ஒழுங்குபடுத்தல்களையும் ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் மேற்கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்த பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதேச செயலகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


2025.09.19
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், கலாசார பேரவையும், மாங்குளம் முத்தமிழ் கலாமன்றமும் இணைந்து நடாத்திய ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழாவானது மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் அமைக்கப்பட்ட சரவணமுத்து யோகேஸ்வரன் அரங்கில், மதிப்பார்ந்த பிரதேச செயலாளரும் கலாச்சார பேரவையின் தலைவருமான திரு. இ. நிஷாந்தன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
தமிழர் தம் வாழ்வியல், விழுமியங்கள் மற்றும் சமய, கலாச்சார வெளிப்பாடுகளுடன் அமைந்த பேரணிகள், பாரம்பரிய நடனங்கள், ஊர்திகள் சகிதம் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், இயல் இசை நாடகம் எனும் முத்தமிழினையும் பிரதிபலிக்கும் வகையில் அரங்க நிகழ்வுகளும் நிகழ்வினை மென்மேலும் சிறப்பித்திருந்தன.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மதிப்பார்ந்த மேலதிக மாவட்ட செயலாளர்களான திரு. சி. குணபாலன் ( நிர்வாகம்), திரு. சி. ஜெயகாந்த் (காணி), மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ், துணுக்காய் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி.அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் மூத்த கலைஞர் திரு.கந்தையா செல்வராசா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு நிகழ்வினை கௌரவித்து சிறப்பித்ததுடன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாக மதிப்பார்ந்த உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், உத்தியோகத்தர்கள் , கலை ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















