2025.09.16

உள்ளூராட்சி வாரம் 2025

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் என்ற தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் 2025.09.16 அன்று சுற்றாடல் மற்றும் மரநடுகை தினமாக கொண்டாடப்பட்டிருந்தது. அன்றைய நாளின் சிறப்பு நிகழ்வாக ஒட்டுசுட்டான் நகரப் பகுதி மற்றும் பிரதேச செயலக பிரதான வீதியின் இரு மருங்குகளிலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை, இராணுவம் , பொலிஸ் மற்றும் பொது மக்களின் பங்குபற்றலுடன் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானப் பணிகளில் ஈடுபட்டதோடு மரநடுகை நிகழ்வினையும் சிறப்பான முறையில் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No photo description available.No photo description available.

 

2025.09.11

பொருளாதார ரீதியில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கான க கற்றல் உபகரணங்கள் வழங்குதல்
மாணவர்களின் பாடசாலை வரவு ஒழுங்கீனம், இடைவிலகல் மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமை ஆகிய பிரச்சினைகளை சீரமைக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டமானது பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் தலைமையில், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு மற்றும் வெளிக்களக் கிளை உத்தியோகத்தர்களால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக, பாடசாலை வரவு ஒழுங்கீனம் மற்றும் இடைவிலகல் நிலையிலுள்ள பிள்ளைகளில், பொருளாதார ரீதியான இடர்பாடுகளை எதிர்நோக்கும் பிள்ளைகளை இனங்கண்டு, அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றைய தினம் (11.09.2025) உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஒலுமடு தமிழ் வித்தியாலயத்திலும் குறித்த கற்றல் உபகரணங்கள் நன்கொடையாளர்களால் அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமனதோடு குறித்த கற்றல் உபகரணங்களினை பெற்றுக் கொடுத்த நன்கொடையாளருக்கு இவ் வேளையில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கின்றொம்.

No photo description available.No photo description available.

 

 

2025.09.10

No photo description available.

2025.09.10

பசுமை உற்பத்தித்திறனுக்கான பொருட்கள் கையளிப்பு

No photo description available.

2025.09.10

பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு, பால் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான கலந்துரையாடல் 2025

No photo description available.

News & Events

10
අගෝ2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
අගෝ2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top