2026.06.05
சுற்றாடல் தின நிகழ்வுகள் 2026
உலக சுற்றாடல் தினமான இன்று உதவி திட்டமிடல் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் உதவி பிரதேச செயலாளரின் தலைமையில் ஒட்டுசுட்டான் சிவன் கோயிலை அண்மித்துள்ள பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள பார்த்தீனியக் களைகளை அகற்றும் பணிகளும் விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந் நிகழ்வானது மாவட்ட விவசாயப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள், ஒட்டுசுட்டான் , வித்தியாபுரம் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச மக்கள் , ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஆசிரியர் மற்றும் மாணவர்கள், ஒட்டுசுட்டான் பிரதேசசபை பணியாளர்கள் மற்றும் எமது அலுவலகப் பணியாளர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயப் போதனாசிரியர் எஸ்.பானுஜன் அவர்களின் பார்த்தீனியக் களைகளை சரியான முறையில் அகற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டின் கீழ் ஒட்டுசுட்டான் பிரதேச சபை பணியாளர்களின் வாகன வசதியுடன் சரியான முறையில் கழிவுகள் அகற்றப்பட்டு சிறப்பான முறையில் விவசாயக் கிளை உத்தியோகத்தர்களால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.May be an image of motorcycle and temple
May be an image of one or more people, people smiling, motorcycle, road and text
May be an image of one or more people
May be an image of one or more people, grass and tree
May be an image of one or more people, grass and tree

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top