2026.04.20
சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தை
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறு கைத்தொழில் பிரிவு ஆகிய திணைக்களங்களால் புத்தாண்டு சந்தை நிகழ்வானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
குறித்த சந்தை நிகழ்வினை மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்த வகையில் ஆரம்பித்து வைத்திருந்தனர். உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துவதற்கான ஒரு களமாக குறித்த சந்தை நிகழ்வு அமைந்திருந்ததுடன் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




















