2026.03.28

சிறுவர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

சிறுவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் பாதுகாப்பு விடயங்களை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகள் தோறும் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்களின் செயற்பாடுகளை செயற்திறன் மிக்கதாக உருவாக்கும் வகையில் மாங்குளம் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், மாவட்ட செயலாளர் திரு அ. உமாமகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு இ. நிசாந்தன், உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரம்மியா தினேஸ்குமார் ஆகியோருடன் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறுவர் கழகங்களுடைய செயற்பாடுகள் தொடர்பாக பார்வையிட்டதுடன் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of text
May be an image of one or more people, chess and text
May be an image of one or more people, chess and text
May be an image of one or more people
May be an image of one or more people, people playing American football, people playing volleyball, people playing football and text

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top