2025.12.26
கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு உறுப்பினர்களை வலுவூட்டும் பயிற்சி நெறி
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலும் செயற்பட்டுவரும் கிராமிய சிறுவர் பாதுகாப்புக் குழுவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை வலுவூட்டும் விழிப்புணர்வு பயிற்சி நெறியானது, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரது ஒழுங்குபடுத்தலில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர் தொடர்பாக இருக்கக்கூடிய அடிப்படை சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக உதவி பிரதேச செயலாளர் திரு. செ. சாருதர்ஷன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வினை வழங்கியிருந்தார். தொடர்ந்து, சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள் மற்றும் கடமைகள், அடிப்படை உளசமூக திறன்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கினை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு ம. வினோத் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு வழங்கியிருந்தார்.
குறித்த பயிற்சி வகுப்பில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்ததோடு, குறித்த வலுவூட்டல் பயிற்சி நெறியானது தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் வழங்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


















