2026.06.19
தலமைத்துவ பயிற்சியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
கிராமிய மட்ட சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலமைத்துவ பயிற்சியும் அவர்களுக்கான பயனுள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வும் பிரதேச செயலாளர் தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வினை உதவி பிரதேச செயலாளர் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான நிதியனுசரணைகளை வழங்கியிருக்கக் கூடிய NAZARENE COMPASSIONATE MINISTRIES OF LANKA ((NCMLANKA) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தலமைத்துவம் (LEADERSHIP) தொடர்பான பயிற்சி நெறியானது சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பயிற்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பிள்ளைகளுக்கான பயிற்சி நெறியினை வழங்கியிருந்தார். அத்துடன் NCMLANKA நிறுவன உத்தியோகத்தரும் பிள்ளைகளுக்கான பயனுள்ள விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் பிரதேச செயலாளருடைய வழிகாட்டல் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த காதலியார் சமளங்குளம், ஒட்டுசுட்டான், புளியங்குளம், வித்தியாபுரம் மற்றும் தட்டயமலை ஆகிய ஐந்து கிராமிய சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of text that says "LEADERSHIP Motivation Motivahon Goals success Contribution Support Teamwork 求 Leadership ship 구일"
May be an image of one or more people and people dancing
May be an image of dais and text
May be an image of one or more people and people smiling
May be an image of ‎dais and ‎text that says "‎เูยรูบมิ้ิ NAZARENE cor MINISTRIES “ና CLUSS CLISSTOFOST TO FOST -்களை நக்கான ச EAN ن ונק 2026 தச செயலகம் angeth the‎"‎‎
May be an image of ‎dais and ‎text that says "‎ስሙተሰወውልሌ ظC лeToи ស NAZARENE c MINISTR ליו CLUPS TO FO வங்கசை கைக்கால e 202 ஏதேச ពនយ CLEAN D தவ ,டடுச‎"‎‎
May be an image of text that says "្ទ NAZARENE cr MINISTRIF WDREN'SCLUBSGF DREN'S CLUBS FOS கழகங்களை கழக் ஙகளை ங்கைக்கான une202€ une 202€ -பிரதே செயலக TLE"
May be an image of one or more people, dais and text that says "cinu NAZARENE COMPASSIONATE MINISTRIESO PEN'S CLUBS TO FOSTER CHILD LEP ஓகங்களை மேம்படுத்த கைக்கான சிறுவர் தசை 2026 ஒநுதச் ស្ងគបកលកល ឥកយលលន gLGalLnd change he world and 00 ui"

News & Events

10
අගෝ2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
අගෝ2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top