2026.06.04
பிரதேச விவசாய உற்பத்தி திறன் குழுக் கூட்டம் 2026
2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்கான பிரதேச மட்ட விவசாய உற்பத்தி திறன் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் (பதில்) திரு இ.றமேஸ் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
விவசாயத்தில் நவீனமயமாக்கல் திட்டங்களை ஊக்குவித்தல், விவசாய நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்கும் கையில் நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடலில், பிரதேச செயலகத்தால் இடம் பெறும் விவசாயத் திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர் அவர்கள் விளக்கமளித்துள்ளதுடன், இலங்கை வங்கியால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய கடன் திட்டங்கள் தொடர்பாக வங்கி முகாமையாளர் அவர்கள் விளக்கமளித்திருந்தார்.
மேலும், முத்தையன்கட்டுப் பிரிவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், கமநல சேவைகள் நிலையம் ஒட்டுசுட்டான் ,கமநல சேவைகள் நிலையம் ஒலுமடு, கமநல காப்புறுதி சபை, கால்நடை வைத்திய அதிகாரிகள் திணைக்களம், விவசாயப் போதனாசிரியர்கள், வனவள திணைக்களம், வனவிலங்கு திணைக்களம், mullai agri business ltd,Golden papaya ltd, கமக்கார அமைப்பு, கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நடைமுறையிலுள்ள விவசாய திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்படும் விவசாய திட்டங்கள் மற்றும் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.May be an image of one or more people, people studying and textMay be an image of one or more people, dais and text that says "R-05"May be an image of one or more people, people studying and text

News & Events

10
අගෝ2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
අගෝ2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top