2025.06.23
 
பிரதேச மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்
 
 
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான குறித்த கலந்துரையாடலானது  (2025.06.23) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மதிப்பார்ந்த உதவி பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றிருந்தது. 
 
முதலாவது காலாண்டின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கிராம மட்டங்களில் தீர்வு காணப்பட முடியாத சிறுவர்களது கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பு, போசாக்கு, சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளும் பெண்கள் தொடர்பாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படிருந்தன. குறித்த பிரச்சினைகள் தொடர்பாக எந்ததவிதமான தீர்வுகளும் பிரதேச மட்டத்தில் காணமுடியாத பிரச்சினைகள் மாவட்ட மட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழு கலந்துலையாடலில் ஆராயப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தன. 
 
இக் கலந்துரையாடலில், பாடசாலை அதிபர்கள், ஒட்டுசுட்டான், மாங்குளம் பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர், சுகாதார மருத்துவ மாது, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
466add0d 239e 4eb8 8116 6e2217bd2c1a
5e169140 7c23 4790 a907 a27044e42cb9
2a7dd564 82a2 4ea8 93dd 42839e80f103
 

News & Events

10
ஆக2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
ஆக2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top