2026.05.14

முதலாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் - 2026

2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கடந்த 14.05.2026 அன்று, அபிவிருத்திக் குழு தலைவரும் கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய செ.திலகநாதன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரப்பமாகியிருந்தது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுடைய அனைத்து விதமான அபிவிருத்திகளும் குறிப்பாக வீதியமைத்தல், குளப்புனரமைப்பு, கட்டுமானம் விவசாயம், வாழ்வாதாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான விடயங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன. அந்தவகையில், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சவாலான விடயங்கள் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆரோக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பொருத்தமான பதில்களை கௌரவ அபிவிருத்திக்குழு தலைவர், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், திரு காதர் மஸ்தான் மற்றும் ப. சத்தியலிங்கம் ஆகியோரும், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கௌரவ புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மற்றும் ஏனைய கௌரவ உறுப்பினர்கள் ஆகியோரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கக்கூடிய ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குளிப்பிடத்தக்கது.
May be an image of one or more people, people studying and text
May be an image of one or more people, people studying, dais and text that says "1 유킨 முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 2026 பிரதேச செயலகம், ஒட்டுகுட்டாள் 2026,85.14 2026, in S Mn Aa oи"
May be an image of one or more people, people studying, dais and text

News & Events

10
ஆக2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
ஆக2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top