2026.05.13

சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

பொதுமக்களுக்கான சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் வினைத்திறனாகவும் ஒரே இடத்தில் வழங்குவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சமூக பராமரிப்பு நிலைய கட்டிடமானது சிறப்பான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகள் அனைவரும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாண்ட் வாத்திய மாணவர்களால் வரவேற்கப்பட்டதுடன், நிகழ்வின் மதிப்புறு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேதநாயகன், மேன்மை தங்கிய இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் H.E Matthew Duckworth, மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் குறித்த நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தனர்.
சிறுவர்கள, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த பிரஜைகள் ஆகியோர் பெற்றுக் கொள்கின்ற 60 க்கும் மேற்பட்ட சேவைகளை குறித்த நிலையத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், வடமாகாண சபையின் மகளீர் விவகார அமைச்சு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துடன் இணைந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஆதரவுடன் குறித்த நிலையமானது செயல்படுத்தப்படுகிறது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் வரவேற்புரையினை பிரதேச செயலாளர் திரு இ. நிசாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். சமூக பலாமரிப்பு நிலையத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு M. நந்தகோபாலன் அவர்கள் விளக்கமளித்திருந்தார். தொடர்ந்து Mr. Johann Rebert, Country Representative, Asia Foundation, மாவட்ட அரசாங்க அதிபர் திரு அ. உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வேதநாயகன் இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் H.E Matthew Duckworth ஆகியோர் தங்களது கருத்துரைகளை வழங்கியிருந்தனர். இறுதியாக வடக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுயா லுக்சாந்தன் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார்.
மேலும் இந் நிகழ்வில், வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு M. நந்தகோபாலன், Mr. Johann Rebert, Country Representative, Asia Foundation, திரு A. சுபாகரன், Exe Director, Strenthening Governance Program, Asia Foundation, Mr. Xin Shi, First Secretary, Australian High Commission, வடக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுயா லுக்சாந்தன் மற்றும் உதவி பிரதம செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of one or more people
May be an image of one or more people, dais and text
May be an image of one or more people, people studying and suit
May be an image of one or more people and people smiling

News & Events

10
ஆக2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
ஆக2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top